அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”முதலமைச்சரும், அமைச்சர்களும் ஊழலில் மூழ்கிவிட்டு, அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என சட்டம் இயற்றி அரசே மக்களை துன்புறுத்துகிறது. ஏற்கனவே வாகன ஓட்டிகளை பாய்ந்து பிடிக்கும் போக்குவரத்து காவலர்களுக்கு இந்த சட்டம் புதிய ஆயுதமாக அமைந்துவிட்டது.
போக்குவரத்து சிக்னல்களில் முறையாக காவலர்களை நியமிப்பதன் படி விபத்துகளை தவிர்க்கலாம் அல்லது போக்குவரத்து சிக்னல்களில் கேமராக்களை பொறுத்தி, சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அவ்வாறு செய்யாமல் வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திக்க வேண்டும் என்பது ஒருபோதும் விபத்துகளை குறைக்காது. எனவே மக்களை பாதிக்கும் இந்த சட்டத்தை உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும். மேலும் இந்த உத்தரவை பிறப்பித்த அரசிற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.