பாரதியாரின் 96-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில் அவரது வம்சம் இனியேனும் விதி செய்யுமா என்று நடிகர் கமல்ஹாசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் நேரடி அரசியலில் களமிறங்க உள்ளதாக கருதப்படும் நிலையில் அவரது ட்விட்டர் கருத்துக்களை பல்வேறு தரப்பினரும் கவனித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கமல் இன்று தனது ட்விட்டரில், “பாரதி போய் 96 ஆண்டுகளாயிற்று. கவிதையையே பொதுவுடமையாக்கி கல்லாத் தமிழர்க்கும் செவிவழி விதை தூவிய அந்த விவசாயி வம்சம், இனியேனும் விதி செய்யுமா?” என்று பதிவிட்டுள்ளார்.