டிரெண்டிங்

”இதுக்கு இவ்வளோ செலவு பண்ணனுமா?” - மனைவியின் புத்திசாலித்தனத்தால் மிச்சமான ரூ.25,000!

JananiGovindhan

DIY (Do it Yourself) ஹேக்கிங் பற்றிய எக்கச்சக்கமான வீடியோக்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிடப்படுகிறது. பலருக்கும் அன்றாட வாழ்க்கையின் வேலைகளை சுலபமாக்க இது உதவியும் வருகிறது. இதுபோன்ற ஹேக்கிங் யாவும், பெரிய பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாவிட்டாலும், நேரத்தை விரயம் செய்வதையாவது தடுக்கும்.

ஆனால் பெண்ணொருவரின் புத்திசாலித்தனமான ஹேக்கிங் டெக்னிக்கால் அவரது கணவருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரையிலான செலவு மிச்சமாகியுள்ளது! அப்படி என்ன செய்திருப்பார் அவர் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

டெக்னாலஜி குறித்த யூடியூப் சேனல் நடத்தும் ரஞ்சித் என்பவரின் மனைவியின் செயல்தான் தற்போது ட்விட்டர் வாசிகளின் பாராட்டு மழைக்கு காரணமாகி இருக்கிறது. வீடியோவின்படி, ரஞ்சித் தன்னுடைய மனைவியிடம் வீட்டில் பயன்படுத்துவதற்காக எளிதில் கையாளக் கூடிய rollable motorised projector வாங்க வேண்டும் என்றும் இதற்கு 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்றும் கூறியிருக்கிறார்.

பொதுவாகவே பெண்கள் செலவினங்களை குறைப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அதைப்போலவே ரஞ்சித்தின் மனைவியும் தன்னுடைய புத்திசாலித்தனத்தை பிரயோகித்து புரொஜெக்டருக்கு ஆகும் செலவை குறைத்திருக்கிறார். அதன்படி 25 ஆயிரம் கொடுத்து புரொஜெட்டர் வாங்குவதற்கு பதிலாக ஒரு வெள்ளை ஸ்க்ரீனை அறையின் அலமாரியில் அழகாக மாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக யூடியூபர் ரஞ்சித் தனது ட்விட்டரில் ஃபோட்டோவோடு போஸ்ட் போட்டிருக்கிறார். அந்த ஃபோட்டோவில் பெட்ரூமில் எந்த செலவும் இல்லாமல் மனைவியால் உருவாக்கப்பட்ட புரொஜெக்டரில் அவர் படம் பார்ப்பது இடம்பெற்றிருக்கிறது.

இந்த பதிவைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் ரஞ்சித் மனைவியின் சமயோஜித அறிவை பாராட்டி வருவதோடு, “எப்போதும் மனைவி பேச்சை கேட்பதுதான் சிறந்தது” என்றும் பதிவிட்டிருக்கிறார்கள்.