தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புதுவை சின்னவீராம்பட்டினம் வின்ட்பிளவர் ரிசார்ட் ஓட்டலில் தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு அவர்கள் இங்கு வந்தனர். அவர்களுக்கு மொத்தம் 20 அறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கு தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ, தங்கத் தமிழ்செல்வன் கூறும்போது, ’நாங்கள் 19 எம்.எல்.ஏக்களும் ஒற்றுமையுடன் இருப்பதை தெரியப்படுத்தவே இங்கு தங்கியுள்ளோம். சசிகலா கூறியதால்தான் எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்தது. அவர் முதலமைச்சர் ஆனார். ஆனால், அவர் இப்போது எங்களை யோசிக்கவில்லை. இரட்டை இலை சின்னத்தை முடக்கி, கட்சியை உடைத்தவர் ஓ.பன்னீர்செல்வம். பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உள்ளது. மற்ற யாருக்கும் அதிகாரமில்லை. பொதுச்செயலாளர் ஒப்புதல் இன்றி பொதுக்குழு கூட்டம் நடத்துவது செல்லாது’ என்றார்.