டிரெண்டிங்

கின்னஸ் ரெக்கார்ட் அறிவிக்கும் அளவுக்கு Monday-வை மக்கள் வெறுக்க என்ன காரணம்?

JananiGovindhan

#MondayBlues #MondayMorningBlues போன்ற ஹேஷ்டேக்குகளை சமூக வலைதளங்களில் கடந்து வராதவர்கள் அரிதுதான். ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமையன்று இந்த ஹேஷ்டேக்கை பலரும் ட்ராண்ட் செய்து வருகிறார்கள்.

வார இறுதி நாட்களை சந்தோஷமாக குதூகலித்துவிட்டு மீண்டும் திங்களன்று காலை பரபரப்பாக தயாராகி பள்ளி, கல்லூரி, அலுவலகத்துக்கு செல்வது மிகப்பெரிய மலையையே அசைக்கக் கூடிய வேலையாகவே கருதப்படுகிறது.

திங்கள் கிழமையன்று வேலைக்கு செல்ல வேண்டும் என்றாலே பெரும்பாலானோருக்கு வேப்பங்காயாகவே கசக்கும். ஏனெனில், வாரத்தின் முதல் நாளாக இருப்பதால் monday blues என சொல்லக் கூடியது எப்போதும் எதிர்மறையான எண்ணங்களை கொடுக்கிறது என மெடிக்கல் நியூஸ் டுடே தெரிவித்திருக்கிறது.

இதன் காரணமாகவே திங்களன்று வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போகும், உற்பத்தி திறனும் குறையக் கூடும். வழக்கமாக செய்யக் கூடிய வேலையை அழுத்தமானதாக தென்படும் என கூறப்பட்டிருக்கிறது.

இதேபோல, வார இறுதியில் இரண்டு நாட்கள் விடுமுறையை கொண்டாடி ஓய்வு எடுத்து தீர்த்த பிறகு அந்த அசதி இருப்பதால் திங்கள் கிழமை எப்போதும் கசப்பான மோசமான நாளாகவே உளவியல் ரீதியாக உருமாறியிருக்கிறது என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

நியூயார்க்கை சேர்ந்த நரம்பியல் நிபுணர் சனம் ஹஃபீஸ் கூறுகையில், “திங்கள் கிழமையை நல்ல நாளாகவே உணரலாம். ஆனால் பெரும்பாலான மக்கள் அப்படியாக உணராததன் காரணமாகவே அதை மோசமாக கருதுகிறார்கள்.” என தெரிவித்திருக்கிறார்கள்.

இப்படியான காரணங்களில் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானோர் திங்கள் கிழமையை மோசமான நாளாகவே முத்திரை குத்திக் கொண்டிருக்கிறார்கள். இது மக்களால் மட்டுமல்ல பற்பல சாதனைகளை புரிவோரை அங்கீகரிக்கும் கின்னஸ் உலக சாதனைகளின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் திங்களை மோசமான நாள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதில், “திங்கள் கிழமைதான் வாரத்தின் மோசமான நாள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ட்வீட் பதிவிடப்பட்ட சில நேரங்களிலேயே எண்ணற்ற நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

திங்கள் கிழமை குறித்த மக்களின் பயத்தை கின்னஸ் உலக சாதனைகளே அங்கீகரித்ததும் இணையவாசிகளை திக்குமுக்காடச் செய்திருக்கிறது என்பதை அந்த ட்வீட்டின் கமெண்ட் செக்‌ஷனை பார்த்தலேயே தெரிந்துக்கொள்ளலாம்.