டிரெண்டிங்

ஒரு பட்டாப்பட்டி ட்ரவுசர் விலை இவ்வளவா? - நெட்டிசன்களை அதிரவைத்த ட்வீட்!

ஒரு பட்டாப்பட்டி ட்ரவுசர் விலை இவ்வளவா? - நெட்டிசன்களை அதிரவைத்த ட்வீட்!

JananiGovindhan

கடைகளில் வாங்கும் பொருட்களுக்கும், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து பெறப்படும் பொருட்களுக்குமான விலை ஏனி வைத்தாலும் எட்டாது என்ற அளவுக்கே இருக்கும்.

ஆனால் நேரடியாக சென்று வாங்குவதற்கு நேரமும், எண்ணமும் இல்லாத காரணத்தால் வீட்டுக்குத் தேவையான A-Z பொருட்கள் அனைத்தையும் ஆன்லைன் மூலமே வாங்கும் பழக்கம் அதிகரித்திருக்கிறது.

இதனால் பல இ-காமர்ஸ் தளங்கள் தங்கள் இஷ்டப்படி சீசன் இல்லாத சமயங்களிலும் தள்ளுபடிகளை வாரி இறைத்து வழக்கத்துக்கு மாறான விலைகளில் விற்பனையை மேற்கொண்டு வருகிறது. இதனை நம்பி பலரும் தரமில்லாத பொருட்களை ஆர்டர் செய்து ஏமாறுவதும் தொடர்கதையாகியுள்ளது.

அந்த வகையில், ஆன்லைன் தளம் ஒன்றில் ஆண்கள் அணியக்கூடிய ட்ரவுசர் ஒன்றின் விலை 15 ஆயிரம் எனக் குறிப்பிட்டுள்ளது நெட்டிசன்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இதுதொடர்பாக ஹர்ஷத் வாஹித் என்ற பயனர் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்துடன் ட்வீட் செய்திருக்கிறார்.

அதில், “இந்த பட்டாப்பட்டி ட்ரவுசரின் விலை 15,000 ரூபாயா?” என்று குறிப்பிட்டு தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ஹர்ஷத்தின் இந்த ட்வீட் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்ததோடு, பலரும் இது தொடர்பாக கிண்டலடித்து பதிவிட்டு வருகிறார்கள்.

“தாத்தாக்கள் அணியும் பட்டாப்பட்டி ட்ரவுசருக்கு இத்தனை விலையா? , இந்த ட்ரவுசரை வாங்கனும்னா கிட்னியதான் விக்கனும்னு நினைக்கிறேன், இது சுத்த பைத்தியக்காரத்தனமா இருக்கு!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.