டிரெண்டிங்

ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்?: திவாகரன் கேள்வி

ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்?: திவாகரன் கேள்வி

Rasus

எடப்பாடி பழனிசாமி அரசு அறுதிப் பெரும்பான்மையை இழந்துவிட்ட நிலையில் ஆளுநர் எதையுமே செய்யாமல் காலம் தாழ்த்துவது ஏன் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திவாகரன், “இந்த அரசு அறுதிப் பெரும்பான்மையை அதிகமாகவே இழந்துவிட்டது. ஆளுநர் ஏன் காலம் கடத்துகிறார் என தெரியவில்லை. ஒன்று முதல்வரை மாற்ற வேண்டும். இல்லையென்றால் ஊழல் கறை பிடிந்த அமைச்சர்களை மாற்ற வேண்டும். ஆனால் எதுவுமே செய்யாமல் ஆளுநர் காலம் தாழ்த்துகிறார். இது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும்” என்றார்.

மேலும், “இரட்டை இலை சின்னத்தை மீட்பதும், அதிமுக அணிகள் இணைப்பும் என்னை பொறுத்தவரை தீராத பிரச்னை. நேற்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிகள் கூட்டத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை” என்றும் திவாகரன் கூறினார்.