தமிழகத்திற்கு மாற்றம் தேவை என்பதால் திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயக கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடும் ஐஜேகேவுக்கு எந்தத் தொகுதி என்பது இதுவரை முடிவாகவில்லை. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஐஜேகே, தற்போது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கு மாற்றம் தேவை என்பதால் திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அதிமுக- பாஜக கூட்டணியில் பாமக இருக்கிறது. எனவே அந்தக் கூட்டணியை தற்போது தொடர முடியாது என பாரிவேந்தர் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.