டிரெண்டிங்

திமுக பேரவையை ஏன் புறக்கணிக்கிறது? - முதல்வர் எடப்பாடி ஆவேசம்

திமுக பேரவையை ஏன் புறக்கணிக்கிறது? - முதல்வர் எடப்பாடி ஆவேசம்

webteam

உண்மை வெளிவந்துவிடும் என்ற அச்சத்தில்தான் திமுக பேரவையை புறக்கணித்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று பேரவையில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி, டிடிவி தினகரன் ஆகியோர், திமுக உறுப்பினர்களிடம் பேசி அவர்களை அவை நடவடிக்கைகளில் பங்கேற்க செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் பழனிசாமி ஸ்டெர்லைட் விவகாரத்தில் நடந்ததைதான் கூறினோம், சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்தே அரசாணை வெளியிட்டோம் என கூறினார். 2010ல் திமுக ஆட்சிக்காலத்தில் தொழில்துறை அமைச்சராக ஸ்டாலி‌ன் இருந்த போதுதான் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டதாக, அப்போது ஸ்டாலின் அமைச்சராக அளித்த பதிலுரையை அவையில் சுட்டிக்காட்டி பேசினார்.

திமுக மாதிரி பேரவை கூட்டத்தில் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அவைக்கு வந்தால் உண்மையை மட்டுமே பேச முடியுமென்று கூறினார். உண்மை வெளிவந்துவிடும் என்ற அச்சத்தில்தான் திமுக பேரவையை புறக்கணிப்பதாகவும் குற்றம்சாட்டினார். ஒரு எதிர்க்கட்சி தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஜெயலலிதாவே உதாரணம் என்று கூறிய முதலமைச்சர், திமுகவை நாங்கள் வெளியேற்றவில்லை, அவர்களாகவே வெளியே சென்றனர். மீண்டும் அவைக்கு வந்தால் நாங்கள் தடுக்கவா போகிறோம் என கூறினார்.