டிரெண்டிங்

தந்தையின் தொகுதியில் போட்டியிடும் அகிலேஷ் - காரணம் இதுதான் !

தந்தையின் தொகுதியில் போட்டியிடும் அகிலேஷ் - காரணம் இதுதான் !

rajakannan

சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அசாம்கார்க் மக்களவையில் அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார். அதேபோல், உத்தரப்பிரதேச முன்னாள் அமைச்சர் அசம் கான் ராம்பூர் தொகுதியில் களமிறங்குகிறார். அசாம்கார்க் தொகுதியில் 2014 தேர்த்லில் வெற்றி பெற்று முலாயம் சிங் தற்போது எம்.பி ஆக உள்ளார். தந்தையின் தொகுதியில் தற்போது மகன் களமிறங்குகிறார். வேட்பாளர் பட்டியலில் முலாயம் சிங் பெயர் இடம்பெறவில்லை. 

அதேபோல், சமாஜ்வாடி கட்சி சார்பில் வெளியிடப்பட்ட 40 பேர் கொண்ட பிரச்சாரத் தலைவர்கள் பட்டியலிலும் முலாயம் பெயர் இடம்பெறவில்லை. அகிலேஷ், ராம் கோபால், அசம் கான், திம்பில், ஜெயா பச்சன் உள்ளிட்டோர் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளனர். 

அசாம்கார்க் தொகுதியில் யாதவர்கள் மற்றும் முஸ்லீம் அதிக அளவில் இருப்பதால், அந்த வாக்குகளை குறித்து அகிலேஷ் அங்கு போட்டியிடுவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னர் கடந்த 30 ஆண்டுகளாக பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதியும் மாறிமாறி வெற்றி பெற்று வந்துள்ளனர். 2009 தேர்தலில் மட்டும் பாஜக வெற்றி பெற்றிருந்தது.