டிரெண்டிங்

கொரோனா அச்சம்.. தனிமைப்படுத்திக் கொண்ட WHO தலைவர்

JustinDurai

கொரோனா தொற்றுள்ள நபருடன் நேரடித் தொடர்பில் இருந்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் தனிமைப்படுத்திக் கொண்டார்.

உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குனராக இருப்பவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ். இவருடன் கொரோனா பாதித்த நபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார்.  இதுபற்றி அறிந்த கெப்ரேயஸ் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் தனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கெப்ரேயஸ் தனது ட்விட்டரில் பதிவில் கூறுகையில், ‘’கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட நபர் என்னை தொடர்பு கொண்டது தெரிய வந்துள்ளது.  நான் நலமுடனேயே உள்ளேன்.  அறிகுறிகள் எதுவும் இல்லை.

எனினும், வருகிற நாட்களில் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்கள்படி, என்னை தனிமைப்படுத்திக் கொள்வேன்.  வீட்டில் இருந்தபடியே பணி செய்வேன்.  நாம் அனைவரும் சுகாதார வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும் என்பது மிக முக்கியம்.

இதன் வழியே கொரோனா பரவலின் சங்கிலியை நாம் உடைத்தெறிய முடியும். கொரோனாவை ஒழிக்க முடியும். கொரோனா பாதிப்புகளில் இருந்து நாடுகளை பாதுகாப்பதற்கும் வேண்டிய பணிகளை உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து மேற்கொள்ளும்’’ என்று அவர் கூறியுள்ளார்.