டிரெண்டிங்

குதிரைபேர ஆட்சி என்ற வசைக்கு வரப்போகும் தீர்ப்பு‌ பதில் தரும்: முதல்வர் பழனிசாமி

குதிரைபேர ஆட்சி என்ற வசைக்கு வரப்போகும் தீர்ப்பு‌ பதில் தரும்: முதல்வர் பழனிசாமி

rajakannan

குதிரை பேர ஆட்சி என்று கூறுபவர்களுக்கு விரைவில் வெளியாக உள்ள தீர்ப்பு‌ பதில் தரும் என்று திமுகவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக சாடியுள்ளார்.

திருச்சியில் எம்.ஜிஆர். நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை,‌ துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்,கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, திருச்சி மாநகராட்சியில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்றும், திருச்சி அரசு மருத்துவமனைகளில் மாரடைப்பு சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்படும் எனவும் கூறினார். 

திருச்சியில் 102 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர் பழனிசாமி, திருச்சி மாவட்டத்தில்‌ மேற்கொள்ளவிருக்கும் புதிய திட்டங்களையும் அறிவித்தார். தொண்டர்களின் ‌ஒற்றுமையே அதிமுகவின் அசைக்க முடியாத பலம் என்று முதலமைச்சர் கூறினார். மேலும் ஆட்சியின் மீது பல்வேறு புகார்களை எதிர்க்கட்சிகள் கூறிவருவதாகவும் குதிரை பேர ஆட்சி என்று கூறுபவர்களுக்கு விரைவில் வெளியாக உள்ள தீர்ப்பு‌ பதில் தரும் என்றும் முதலமைச்சர் கூறினார். 2 ஜி வழக்கில் விரைவில் வெளியாக உள்ள தீர்ப்பை தான் முதலமைச்சர் மறைமுகமாக சுட்டிக்காட்டி திமுக சாடியுள்ளதாக கருதப்படுகிறது.