டிரெண்டிங்

தமிழக அரசியலில் அடுத்தது என்ன? சென்னை வந்தார் ஆளுநர்

webteam

தமிழக அரசியலின் பரபரப்பான சூழலில் ஆளுநர் வித்யாசாகர் சென்னை வந்தார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்துள்ளார். அத்துடன் 18 சட்டமன்ற தொகுதிகளும் காலியாக உள்ளது என தனபால் அறிவித்ததையடுத்து, அது தமிழக அரசு அரசிதழிலிலும் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தகுதி நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி தினகரன் அணி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசியல் சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் வித்தியாசாகர் ராவ் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்தையும் சந்தித்து ஆளுநர் வித்யாசார் ராவ் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே எதிர்க்கட்சியான திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் வித்யாசாகர் சென்னை வந்துள்ளார்.