ஆலோசகர் டீனா அபிஷேக்
ஆலோசகர் டீனா அபிஷேக்  PT
டிரெண்டிங்

”குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது குறைவதற்கு முக்கிய காரணம் எது?” - பாலூட்டுதல் ஆலோசகர் விளக்கம்

PT

உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவில் 60 விழுக்காடு தாய்மார்கள் மட்டுமே குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதாக பாலூட்டுதல் ஆலோசகர் டீனா அபிஷேக் தெரிவித்துள்ளார்.

உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்பட்டு வருவதை ஒட்டி ஆலோசகர், டீனா அபிஷேக், அவர்கள் இது குறித்து பேசும்பொழுது,

“குழந்தைகளின் வளர்ச்சியில் தாய்ப்பாலின் பங்கு இன்றியமையாதது. இந்தியாவில் 60% தாய்மார்களே குழந்தைகளுக்கு பாலூட்டுகின்றனர்.

பணியிடங்களில் தாய்மார்கள் சந்திக்கும் பிரச்சனைகளால் பாலூட்டுவது குறைந்துள்ளது. தாய்மார்களுக்கு உரிய வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும். உணவு மட்டுமே தாய்ப்பால் சுரக்க உதவாது ” என்று கூறியுள்ளார். இது குறித்து காணொளியை பார்கலாம்.