டிரெண்டிங்

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் - காலையில் மந்தமான வாக்குப்பதிவு

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் - காலையில் மந்தமான வாக்குப்பதிவு

JustinDurai

பலமுனை போட்டி நிலவும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காலையில் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு தற்போது எந்த அளவுக்கு இருக்கிறது?

பெரிதும் கவனிக்கப்படும் பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. 117 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆட்சியை தக்கவைக்க காங்கிரசும், ஆட்சியை பிடிக்க பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் மீண்டும் ஆட்சியமைக்க சிரோமணி அகாலிதளமும் முயற்சித்து வருகின்றன. தேர்தல் களத்தில் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, சித்து, அமரீந்தர் சிங், பிரகாஷ் சிங் பாதல், பகவந்த் மான், சுக்பீர் சிங் பாதல் உள்ளனர்.

ரத்து செய்யப்பட்ட போதிலும் வேளாண் சட்ட விவகாரம் பஞ்சாப் தேர்தல் பரப்புரையில் முக்கியமாக இடம்பெற்றுள்ளது. பஞ்சாப்பில் காலை 9 மணி வரை 4.80% வாக்குகள் பதிவாகியுள்ளது.

இதையும் படிக்க: பஞ்சாப்க்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் - 117 தொகுதிகளில் 1,304 வேட்பாளர்கள் போட்டி