டிரெண்டிங்

உங்க செல்ல நாய்களுக்கு விதவிதமான உணவுக் கொடுக்குறீங்களா?

உங்க செல்ல நாய்களுக்கு விதவிதமான உணவுக் கொடுக்குறீங்களா?

Sinekadhara

எல்லோரும் வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பது வழக்கம். அதிலும் நாய் வளர்ப்பவர்கள்தான் நம்மில் அதிகம். நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளையும் நாய்க்கும் கொடுத்து பழக்குவோம். ஆனால் மனிதன் சாப்பிடும் எல்லா உணவுகளும் நாய்களுக்கு சேராது. சில உணவுகளை நாய்களுக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

சிலர் நாயை நாய் என்று சொன்னால்கூடத் திட்டுவார்கள். அந்தளவிற்கு பாசம் வைத்திருப்பார்கள். சில பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்காக வாங்கி வரும் தின்பண்டங்கள் அனைத்தையும் நாய்களுக்கும் கொடுப்பார்கள். அதில் சாக்லெட் கொடுப்பதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். சாக்லெட்டில் உள்ள சில கூறுகள் அதன் உடலை பாதிக்கும். இதனால் வயிற்றுப்போக்கு, அதிக தாகம் எடுக்க வைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. 

நம் உடலை பாதிக்கும் என தெரிந்தும் நாம் வறுத்த உணவுகளை சாப்பிடுகிறோம். வாய் இல்லா ஜீவனுக்கும் அதனை ஊட்டுவது எந்த வகையில் நியாயம். பாப்கார்ன், ஃப்ரைடு ரைஸ் போன்ற உணவு பொருள்களை நாய்களுக்கு கொடுப்பதால் சிறுநீர் கோளாறு ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. 

நாம் அதிகம் எடுத்து கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்படும் வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவை நாய்களுக்கு தரக்கூடாது. இதனை நாய்கள் சாப்பிட்டால் ரத்த அணுக்களில் பாதிப்பு ஏற்படலாம். 

உலர் திராட்சை நாய்களுக்கு கொடுத்தால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும் இறைச்சி போன்ற உணவுகளை நன்கு வேக வைத்த பின்னரே நாய்களுக்கு கொடுக்க வேண்டும். இல்லையெனில் குடல் பாதிப்பு ஏற்படும்.