டிரெண்டிங்

மே.வங்க பாஜக தொண்டரின் தாயார் மரணம்: அமித்ஷா, மம்தா இடையே வார்த்தைப் போர்  

மே.வங்க பாஜக தொண்டரின் தாயார் மரணம்: அமித்ஷா, மம்தா இடையே வார்த்தைப் போர்  

Veeramani

85 வயதான ஒரு பெண்ணின் மரணத்தை கண்டித்த அமித் ஷாவின் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி பேசுவாரா என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

கடந்த மாதம் மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் நிம்தாவில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களால் பாஜக தொண்டரின்  85 வயது தாயார் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, அவர் நேற்று மரணமடைந்தார். இது குறித்து அமித் ஷா செய்த ட்வீட்டில் , “வங்காளத்தின் மகள் ஷோவா மஜும்தார் ஜி மறைந்தார், அவர் டி.எம்.சி குண்டர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார். அவரது குடும்பத்தினரின் வலியும், காயங்களும் மம்தா தீதியை காலகாலத்துக்கும் வேட்டையாடும். வன்முறை இல்லாத எதிர்காலத்தை உருவாக்க வங்காளம் போராடும், எங்கள் சகோதரிகள் மற்றும் தாய்மார்களுக்கு பாதுகாப்பான மாநிலத்தை உருவாக்குவதற்காகவும் மேற்கு வங்கம் போராடும்என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த மம்தா பானர்ஜி சகோதரி எப்படி இறந்துவிட்டார் என்று எனக்குத் தெரியாது. பெண்களுக்கு எதிரான வன்முறையை நாங்கள் ஆதரிக்கவில்லை. அமித் ஷா ட்வீட் செய்து, ‘பெங்கால் கா கா ஹால் ஹைஎன்று கூறுகிறார். ஆனால் உத்தரபிரதேசத்தில் பெண்கள் பாதுகாப்பின் நிலை என்ன? ஹத்ராஸில் என்ன நிலை? ” என்று தெரிவித்தார். வரும் ஏப்ரல் 1 ம் தேதி மேற்குவங்கத்தில் நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், தேர்தல் நடைபெறும் 30 சட்டமன்றத் தொகுதிகளில் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் உள்ளது.