சிபிஎஸ்சிக்கு இணையான பாடதிட்டத்தை கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கற்றல் குறைபாடுள்ள மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும், “பல்வேறு மாநிலங்களில் உள்ள சிபிஎஸ்சிக்கு இணையாக பாடத்திட்டம் உருவாக்கப்படுவதோடு, தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தொன்மைகள் மங்கிவிடாமல் அந்தப் பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று செங்கோட்டையன் கூறினார்.