டிரெண்டிங்

வாக்கி டாக்கி' விவகாரம்: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

வாக்கி டாக்கி' விவகாரம்: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

webteam

'வாக்கி டாக்கி விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், வெளிப்படையான நிர்வாகத்தை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்திருப்பதை வரவேற்பதாக கூறியுள்ளார். வாக்கி டாக்கி ஒப்பந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் பிரச்னை குறித்து கேள்வி எழுப்பிய உள்துறை செயலாளரை மாற்றுவதற்கு முதலமைச்சர் பழனிசாமி திட்டமிட்டிருப்பதாக, தெரிய வந்துள்ளது என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 
வாக்கி டாக்கி விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சுதந்திரமான விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும் ஸ்டாலின் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.