டிரெண்டிங்

விஷால் வேட்புமனு நிராகரிப்பு

விஷால் வேட்புமனு நிராகரிப்பு

webteam

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விஷால் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனனும், சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரனும், திமுக சார்பில் மருதுகணேஷும் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுகிறார். இவர்களுடன் சுயட்சையாக நடிகர் விஷாலும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் பொதுச்செயலாளர் தீபாவும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இன்று நடைபெற்ற வேட்புமனு மீதான பரிசீலனையில் தீபாவின் மனு நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் விஷாலின் மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆர்.கே நகர் இடைத்தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அளித்துள்ள விளக்கத்தில், விஷாலை முன்மொழிந்தவர்களின் பெயர்கள் தவறாக உள்ளதால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அத்துடன் வேட்பாளர் ஒருவரின் மனு ஏற்கப்பட தொகுதியைச் சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும் என்றும், ஆனால் விஷாலை முன்மொழியாதவர்களின் 2 பெயர்கள் வேட்பு மனுவில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இரண்டரை மணி நேரம் விஷாலின் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், அவரது மனு நிராகரிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே விஷாலின் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என அதிமுக, திமுக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.