டிரெண்டிங்

ஆர்.கே.நகர் தொகுதியில் நடிகர் விஷால் போட்டி

ஆர்.கே.நகர் தொகுதியில் நடிகர் விஷால் போட்டி

rajakannan

ஆர்.கே.நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தனது நண்பர்களுடன் விஷால் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, போட்டியிடுவது குறித்து இன்று விஷால் அறிவிப்பார் என்று செய்திகள் வெளியாகி இருந்தது. 

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிடுகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. விஷால் சுயேட்சையாக போட்டியிடுகிறார். விஷால் ஏற்கனவே நடிகர் சங்கத் தேர்தல், தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்களில் வெற்றி பெற்றார்.

வேட்புமனு தாக்கல் செய்ய டிசம்பர் 4-ம் தேதி தான் கடைசி நாள் என்பதால் நாளை அல்லது நாளை மறுநாள் விஷால் மனுத்தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. ஏற்கனவே திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், டிடிவி தினகரன் மூவரும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் மீது அரசியல் குறித்த எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில் விஷால் எதிர்பார்க்காத வகையில் அரசியலில் களமிறங்கியுள்ளார்.