டிரெண்டிங்

"இதுவும் கடந்து போகும்" தோல்வி குறித்து விராட் கோலி !

"இதுவும் கடந்து போகும்" தோல்வி குறித்து விராட் கோலி !

jagadeesh
ஐபிஎல் தொடரின் ஆரம்பகட்டத்தில் இருக்கிறோம் இந்தத் தோல்வியையும் கடந்து செல்வோம் என்று பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்

துபாயில் நேற்று பஞ்சாப் அணியுடனான ஆட்டத்தில் பெங்களூர் அணி படுதோல்வியை சந்தித்தது. இது குறித்து பேசியுள்ள விராட் கோலி "ஆட்டத்தில் எது தவறாக போனது என்பது எங்களுக்கு தெரியும். இரண்டு கேட்ச் பிடிக்கும் வாய்ப்புகளை நான் தவறவிட்டேன். அது மிகவும் முக்கியமான வாய்ப்பு. கிரிக்கெட் போட்டிகளின் போது இதுபோன்ற நாட்களும் அமையும். அதை நாம் ஒத்துக்கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும்" என்றார்.

மேலும் "பஞ்சாப் பேட்டிங் செய்யும் போது ஆட்டத்தின் நடுப்பகுதியில் நாங்கள் சிறப்பாகவே பந்து வீசினோம். ஆட்டம் எங்களது கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் ராகுலின் இரண்டு கேட்சுகளை தவறவிட்டதன் காரணமாக 35-40 ரன்களை கூடுதலாக விட்டுக்கொடுத்துவிட்டோம். இதன் காரணமாகவே சேஸ் செய்யும்போது முதல் பந்தில் இருந்தே அழுத்தம் அதிகமானது" என்றார் கோலி.

தொடர்ந்து பேசிய அவர் "ஒருநாள் நல்ல போட்டியாக அமையும் மற்றொரு நாள் மோசமானதாக இருக்கும். எனவே அவற்றையெல்லாம் விட்டுவிட்டு அடுத்து நகர்ந்துவிட வேண்டும். தவறில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும், ஒரு அணியாக இதையெல்லாம் சரியாகவே புரிந்து வைத்திருக்கிறோம்" என்றார் கோலி.