Japan -Shirt with Fan
Japan -Shirt with Fan Twitter
டிரெண்டிங்

சட்டைக்குள் ஒரு ஸ்மார்ட் மின்விசிறி! ஜப்பானிய அதிகாரிக்கு குவியும் பாராட்டுக்கள்! #ViralVideo

PT WEB

கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றுடன் ‘ஓவர் ஸ்மார்ட்னெஸ்’ என்பதற்கும் பெயர் பெற்ற நாடு ஜப்பான். இந்த ஓவர் ஸ்மார்னெஸூக்கு சிறந்த உதாரணமாகியுள்ளார் ஜப்பானிய அதிகாரி ஒருவர். அவர் செய்த ஒரு ஸ்மார்ட் செயல் தற்போது சமுக வலைதளமான ட்விட்டரில் வைரலாகி வருகின்றது. ஜப்பானில் குடிமைப்பணிகளை செய்யும் ஒருவர், தன்னை வெப்பத்திலிருந்து தற்காத்து கொள்ள சட்டையில் மின்விசிறி பொருத்தியுள்ளார்.

இதனை தன் ட்விட்டர் பதிவில் பகிர்ந்துள்ள ஒரு பயனர், தனது பதிவில் “இந்த மனிதர் தன்னை வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில், ஆடைகளில் மின்விசிறியை பொருத்தி கொண்டுள்ளார். இந்த விசிறியானது வெளிப்புறக் காற்றை உறிஞ்சி, உடலின் வியர்வையை ஆவியாக மாற்றிவிடுகிறது. மேலும் உடலை குளிர்விக்க தேவையான காற்றையும் கொடுக்கிறது” என்று கூறியுள்ளார்.

இந்த வித்தியாசமான கண்டுபிடிப்பை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதில், ஒருவர் “நான் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமானப்பணியினை செய்து கொண்டிருந்தேன். அப்போது இதுமாதிரியான ஒன்று இருந்திருந்தால் எனக்கு உதவியாக இருந்திருக்கும்” என்றுள்ளார். மற்றொருவர் “காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கு நாம் கையாளும் வழியாக இதுதான் இருக்க போகின்றதா?” என்றுள்ளார். இந்த வீடியோ இதுவரை சுமார் 6 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

- Jenetta Roseline S