டிரெண்டிங்

ரிஜெக்ட் ஆன நேர்காணலுக்கு memes மூலம் சென்ற 'டிக்டாக்' பெண்.. அது எப்படி சாத்தியமாச்சு?

JananiGovindhan

டிஜிட்டல் தொழில்நுட்பத்தோடு நாட்களை கடத்திக் கொண்டிருக்கும் வேளையில் தினந்தோறும் நடக்கும் பிரச்னைகள் அனைத்தும் மீம் பதிவுகளில் பிரதிபலிப்பது பலரது அயர்ச்சியையும் போக்கும் வகையில் ஒரு அங்கமாகிக் கொண்டிருக்கிறது.

சமூக பிரச்னைகளை பேசவும், சொந்த பிரச்னையை எடுத்துரைக்கவும் மீம்கள் எல்லோருக்குமே வசதியாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்டெர்வியூவில் புறக்கணிக்கப்பட்ட அலுவலகத்தில் இருந்தே மீண்டும் நேர்காணலுக்கு வரச்சொல்லி பெண் ஒருவருக்கு அழைப்பு வந்ததற்கு மீம் உதவியாக இருந்ததென்றால் நம்ப முடிகிறதா?

அதன்படி, டிக்டாக் தளத்தில் @swedishwan என்ற கணக்கை கொண்ட பெண் ஒருவர் பதிவிட்ட மீம் வீடியோதான் அவருக்கு மீண்டும் வேலைக்கான நேர்காணலுக்கு வழி வகுத்திருக்கிறது. அதில், அப்பெண் பல அலுவலகங்களில் தனக்கு வேலை வேண்டி விண்ணப்பித்திருந்த போதும் அது தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்திருக்கிறது.

அனால் கடைசியாக வந்த புறக்கணிப்பு மெயிலுக்கு போப் லியோ எக்ஸ்-ன் பெயிண்டிங் படத்துடன் ’y tho’ என பதில் அனுப்பியிருக்கிறார். அந்த மெயில் பதிவை தன்னுடைய டிக்டாக் பக்கத்தில் பகிர்ந்த அவர், “தனக்கு இந்த வேலை மிகவும் தேவைப்படது. அதனால் gen z-ல் இருந்து அதனை பாடமாக எடுத்துக்கொண்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ 1 மில்லியனுக்கும் மேலான வியூஸ்களை பெற்றிருந்ததால் அப்பெண்ணுக்கு அதே அலுவலகத்திலிருந்து மீண்டும் இண்டெர்வியூக்கு வரச்சொல்லி அழைத்திருக்கிறார்கள். இதனையடுத்து, வீடியோவை வைரலாக்கிய அனைவருக்கும் நன்றி எனக் கூறி தான் இண்டெர்வியூவிற்கு அழைக்கப்பட்டதையும் குறிப்பிட்டு அப்பெண் பதிவிட்டிருக்கிறார்.

இதேப்போன்று கடந்த மார்ச் மாதத்தில், சமந்தா ஜேன் என்ற பெண்ணும் தன்னை நிராகரித்தது தொடர்பாக gen z-ன் y tho அனுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.