டிரெண்டிங்

வெளிநாட்டில் தவிப்பவர்களை மீட்க விஜயகாந்த் கோரிக்கை

வெளிநாட்டில் தவிப்பவர்களை மீட்க விஜயகாந்த் கோரிக்கை

Rasus

வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்க இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று சுமார் 40-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மெய்கண்டன் என்பவர் மலேசியாவில் கொடுமைகளை சந்தித்து வருவதாகவும் அவரை மீட்டுத்தரக் கோரி குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதையும் விஜயகாந்த் சுட்டிக்காட்டியுள்ளார். ஆசைவார்த்தைகள் கூறி வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லும் கும்பல் யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். வேலைக்காக அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்க இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.