உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் நாளை முதல் விநியோகிக்கப்படும் எனவும் அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை வரும் 25ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
விருப்ப மனு பெற மேயர் பதவிக்கு 15 ஆயிரம் ரூபாயும் மாநகராட்சி வார்டு உறுப்பினர், பேரூராட்சித் தலைவர், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு 4 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல நகராட்சித் தலைவர், பேரூராட்சி உறுப்பினர் பதவிகளுக்கும் கட்டணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.