டிரெண்டிங்

சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்

சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்

Rasus

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்கு பின் இன்று காலை மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவ்வப்போது அவதிப்பட்டு வருகிறார். இதற்காக ஏற்கனவே சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதியும் மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் மீண்டும் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் சிகிச்சை உடையில் இருந்த விஜயகாந்த் போட்டோவும் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் இன்று மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். தமிழக மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடவில்லை. இந்த இடைத்தேர்தலில் தேமுதிக யாருக்கும் ஆதரவு அளிக்காது எனவும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.