டிரெண்டிங்

ரஜினி கமல் கட்சி ஆரம்பித்தால் தமிழகத்தில் மாற்றம் வருமா? : விஜயகாந்த் பேட்டி

ரஜினி கமல் கட்சி ஆரம்பித்தால் தமிழகத்தில் மாற்றம் வருமா? : விஜயகாந்த் பேட்டி

webteam

ரஜினி,கமல் அரசியல் கட்சி ஆரம்பித்தால் தமிழக அரசியல் களத்தில் மாற்றங்கள் வருமா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து கூறியிருக்கிறார். ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் அவரது உடல்நிலை, சினிமா, அரசியல் என பல விஷயங்கள் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.  

உங்கள் உடல்நிலை எப்படி உள்ளது? இப்போது எப்படி இருக்கிறீர்கள்?

“நான் நலமா இருக்கேன். எனக்கு தைராய்டு பிரச்னை இருந்தது. ஆகவே எனது குரல்வளை பாதிக்கப்பட்டது. இது வழக்கமானதுதான். இப்ப நீங்கள் என்னை பார்த்து சொல்லுங்கள் நான் எப்படி இருக்கிறேன்?

உங்கள் மனநிலை இப்போது எப்படி உள்ளது? புத்துணர்வாக இருக்கிறீர்களா?

“நான் புத்துணர்வாகதான் இருக்கிறேன். தினமும் கட்சி அலுவலகம் வருகிறேன். அங்குள்ள அன்றாட நடவடிக்கைகளை கவனிக்கிறேன்”

உங்களுடைய அன்றாட வாழ்க்கை எப்படி போகிறது?

”என்னுடன் எப்போதும் என் மனைவி இருக்கிறார். என் மகன்கள் இருக்கிறார்கள். என் இளையமகன் பேட்மிட்டன், ஸ்நூக்கர் விளையாட்டில் ஈடுபாட்டுடன் இருக்கிறான். அவன் வளர்க்கும் நாய்க்குடிகளோடு விளையாடுகிறேன். தினம் ஆபீஸ் வந்து போகிறேன். மதியம் என் மனைவி சமைத்து வைத்திருக்கும் சுவையான உணவுகளை மதியம் சாப்பிடுகிறேன். எனக்கு தனியாக சில உணவுகள் தயாராக இருக்கும். மதியம் வெக்கையாக இருந்தால் ஏசியை பயன்படுத்துவேன். மற்ற நேரங்களில் ஏசி போடுவதில்லை. ஏனென்றால் மின்சார கட்டணத்தை ஏற்றிவிட்டார்கள். இல்லையா?”

ஒரு வருஷத்தில் 18 படங்கள் வரை நடித்திருக்கிறீர்கள் இல்லையா?

“ஆமாம். ஆனால் இப்போது என் சிந்தனை முழுக்க அரசியல் பிரச்னைகள் பற்றியும் அதை எப்படி தீர்ப்பது என்பதை பற்றியும்தான் இருக்கிறது”

சினிமாவை தவறவிட்டதாக நினைக்கிறீர்களா?

“அப்படி எல்லாம் இல்லை.”

அப்படி என்றால் சினிமாவுக்கான கண்டென்ட் உங்களிடம் இருக்கிறதா?

”ஆமாம் இருக்கிறது. நான் இப்போது முடிவெடுத்தாலும் சொந்தமாக சினிமா தயாரிக்க முடியும். என்னை மக்கள் பார்க்க விரும்புகிற வரை நான் இதைவிட்டு போகமாட்டேன். இப்போது என் மகன் நடிக்கும் தமிழன் என்று சொல் படத்தில் நடித்து கொண்டுதான் இருக்கிறேன்”

உங்கள் வாழ்க்கையில் என்ன வித்தியாசம் தெரிகிறது? நீங்கள் நடிக்கும் போது இருந்ததைவிட இப்போது?

“அந்த நாட்களில் எல்லோரும் நடிப்பார்கள் ஆனால் அது எளிமையல்ல; நான் ஷூட்டிங் இருந்தால் போய் நடிப்பேன் இல்லையா படங்களை பார்த்து கொண்டிருப்பேன். என் மனைவி சில நேரங்களில் கேட்பார் சினிமாவை விட்டுவிட்டு ஏன் என்னை கல்யாணம் செய்து கொண்டீர்கள் என்று.” 

சமூக வலைதளங்களில் உங்களை பற்றி வரும் மீம்ஸை பார்க்கிறீர்களா?

“நான் அவைகளை பார்ப்பதில்லை.என்னை பாராட்டுவதை நான் ஏற்று கொண்டால் இந்த விஷயங்களையும் எற்றுக் கொள்ள வேண்டும். என் மகன் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பற்றி சொல்வார். ஆனால் நான் அதற்காக கவலைப்படுவதில்லை”

சினிமாதுறையுடன் உங்களது சம்பந்தம் எப்படி இருக்கிறது?

“நான் இப்போது அரசியலில் மட்டுமே சம்பந்தப்பட்டிருக்கிறேன். சினிமாதுறையோடு சம்பந்தப்படவில்லை”

கமல், ரஜினி அரசியலுக்கு வருவதால் அரசியல் வட்டாரத்தில் மாற்றம் வருமா?

“ஒரு மாற்றமும் வராது”