சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக சிகிச்சைக்காக அவ்வப்போது சிங்கப்பூருக்கு சென்று வந்தார். இந்த நிலையில், கடந்த 7ம் தேதி விஜயகாந்த் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அவருடன் மனைவி பிரேமலதா மற்றும் மகன் ஆகியோர் சென்றனர்.
ஒரு மாதமாக அமெரிக்கவில் தங்கி சிகிச்சை பெற்று வரும் அவர், இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தான் குடும்பத்துடன் வெளியே சென்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதேபோல் மற்றோரு பதிவில் தான் சிரிப்பது மாதிரியான புகைப்படத்தை பதிவிட்டு ‘அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.