சட்டப்பேரவையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படம் திறப்பதற்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில் அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை அரங்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படம் இன்று திறந்து வைக்கப்படுகிறது. ஜெயலலிதாவின் படம் திறப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் பேரவை கொறடாவும், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான விஜயதரணி ஆதரவு தெரிவித்துள்ளார்.