டிரெண்டிங்

சால்வை பற்றாக்குறையால் திணறிய அமைச்சர்

சால்வை பற்றாக்குறையால் திணறிய அமைச்சர்

webteam

பாராட்டு விழாவில் சால்வை பற்றாக்குறை ஏற்பட்டதால் அணிவிக்கப்பட்ட சால்வை மற்றொருவருக்கு அணிவிக்க வேண்டிய நிர்பந்தம் அமைச்சருக்கு ஏற்பட்டது. 

மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் தென் தமிழகத்தில் முதல்முறையாக இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் அமைச்சர் சால்வை அணிவித்து சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். 
அப்போது சால்வை குறைந்த அளவில் இருந்ததால் ஏற்கனவே அணிவிக்கப்பட்டவர்களிடம் இருந்து சால்வையை திரும்ப பெற்று மேடைக்கு வந்தவர்கள் அனைவருக்கும் திரும்ப அணிவிக்க வேண்டிய நிர்பந்தம் அமைச்சருக்கு ஏற்பட்டது. இந்தநிகழ்வு கலந்து கொண்ட பலரை வருத்தத்தில் ஆழ்த்தியது.