எடப்பாடி தொகுதியில் அதிமுக மண்ணை கவ்வும் என விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்தார்.
கடலூர் பண்ருட்டியில் பேசிய விஜய பிரபாகரன் “நாங்க கேட்கிற சீட் கொடுக்க முடியவில்லை என்றால் ஒவ்வொரு சீட்டும் பறிக்கப்படும். எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி தோல்வியடைவார். சாணக்கியனாக இருந்தது போதும். சத்ரியனாக இருக்க நேரம் வந்துவிட்டது. விஜயகாந்த், பிரேமலதாவை பார்த்திருப்பீர்கள்; இனி இருவரையும் கலந்து என்னை பார்ப்பீர்கள்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். அதிமுகவுக்கு இனி இறங்கு முகம்தான். சாதி பற்றி எனக்கு தெரியாது; நமக்கு தெரிந்த ஒரே சாதி தேமுதிகதான். சாதியை பற்றி பேசுவதில் நான் முட்டாளாகவே இருப்பேன். குகையில் இருந்து சிங்கம் வெளியே வருகிறது. இனி வேட்டைதான். தலையே போனாலும் தேமுதிக தன்மானம் இழக்காது” என்றார்.