டிரெண்டிங்

டிச.26ல் முதல்வராக பதவியேற்கிறார் விஜய் ரூபானி

டிச.26ல் முதல்வராக பதவியேற்கிறார் விஜய் ரூபானி

rajakannan

டிசம்பர் 26-ம் தேதி குஜராத் மாநில முதலமைச்சராக விஜய் ரூபானி பதவியேற்கவுள்ளார்.

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 99 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. காங்கிரஸ் கட்சி 77 இடங்களை கைப்பற்றியது. பாஜக கடந்த தேர்தலை விட 16 இடங்களை குறைவாக கைப்பற்றியது. 100 இடங்களை கூட பாஜகவால்  கைப்பற்ற முடியவில்லை என்பதால் முதலமைச்சராக இருந்த விஜய் ரூபானிக்கு பதிலாக வேறு ஒருவரை தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. முதலமைச்சருக்கான போட்டியில் ஸ்மிரிதி இரானியும் இருந்ததாக பேசப்பட்டது. ஆனால் அதனை அவர் மறுத்துவிட்டார். இதனால் விஜய் ரூபானி முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவது உறுதியானது.

இறுதியாக விஜய் ரூபானியை நேற்று மீண்டும் முதல்வராக தேர்வு செய்து பாஜக அறிவித்தது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, குஜராத் பாஜக எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு விஜய் ரூபானியை தேர்வு செய்துள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில்,  டிசம்பர் 26-ம் தேதி குஜராத் மாநில முதலமைச்சராக விஜய் ரூபானி பதவியேற்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  பதவியேற்பு விழா தலைநகர் காந்திநகரில் உள்ள சச்சிவாலயா மைதானத்தில் காலை 11 மணிக்கு  நடைபெறுகிறது.