டிரெண்டிங்

”பாதாள சாக்கடை பிரச்னைக்கு தீர்வு அளிப்போம்”- தீவிர பரப்புரையில் விஜய் மக்கள் இயக்கத்தினர்

”பாதாள சாக்கடை பிரச்னைக்கு தீர்வு அளிப்போம்”- தீவிர பரப்புரையில் விஜய் மக்கள் இயக்கத்தினர்

Sinekadhara

மயிலாடுதுறையில் நகர்ப்புற உள்ளாட்சி நகராட்சி வார்டு தேர்தலில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்கத்தினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகராட்சி, பேரூராட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கதினர் 7 பேர் போட்டியிடுகின்றனர். இதில், நகராட்சி 26-வது வார்டில் முகமது ஆசிப் என்ற 21 வயது பட்டதாரி இளைஞர் தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். வேட்பாளர் பெயர் அறிவித்த நாள்முதல் பம்பரமாய் சுற்றி வாக்கு சேகரித்து வரும் பட்டதாரி இளைஞருக்கு, இன்று அந்த இயக்கத்தின் மாவட்ட தலைவர் குட்டிகோபி வீடுவீடாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

விஜய் மக்கள் இயக்க வேட்பாளருக்கு வாக்களித்தால், நகரில் பிரதான பிரச்னையாக உள்ள பாதாள சாக்கடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தர போராடுவார் என உறுதியளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.