டிரெண்டிங்

நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்குமா?: பிரதமரை சந்தித்தார் விஜயபாஸ்கர்

webteam

நீட் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.‌

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் உடனிருந்தார். இதைத் தொடர்ந்து சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தையும் விஜயபாஸ்கர் சந்தித்து பே‌சினார். நீட் விலக்கிற்கான புதிய சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

முன்னதாக நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி புதிய சட்ட முன்வடிவு உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகங்களிடம், உள்துறை அமைச்சகம் கருத்து கேட்டு, அந்த அமைச்சகங்கள் அனுமதி அளிக்கும் பட்சத்தில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.