டிரெண்டிங்

”திஸ் இஸ் பிசினஸ்...” : சிந்தாம சிதறாம மக்களுக்கு சாலையை கடக்க உதவிய அடடே தொழில் முனைவோர்!

”திஸ் இஸ் பிசினஸ்...” : சிந்தாம சிதறாம மக்களுக்கு சாலையை கடக்க உதவிய அடடே தொழில் முனைவோர்!

JananiGovindhan

மழைக்காலம் வந்துவிட்டால் போதும் ரோட்டில் இருந்து வீட்டுக்கு வந்து சேர்வதற்குள் போதும் போதும் என ஆகிவிடும். மழை நீரோடு கழிவு நீரும் சேர்ந்து சாலைகளில் தேங்கி நிற்பதால் அதில் இருந்து ஒருவழியாக தப்பிப்பதற்கு பாடாய் பட வேண்டி இருக்கும்.

இதுபோக கேப், டாக்சி போன்றவற்றை மழைக் காலங்களில் அணுகினால் எக்கச்சக்கமாக கட்டணத்தை போட்டு சம்பாதிப்பதில் குறியாக இருப்பார்கள். அந்த வகையிலான வீடியோ ஒன்றுதான் சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களை அசர வைத்திருக்கிறது.

அதில், பிசியான சாலை ஒன்றில் கணுக்கால் அளவுக்கு தேங்கி நிற்கும் மழை நீரில் செல்ல முடியாமல் முழித்துக் கொண்டிருந்தவர்களை கடக்கச் செய்யும் வகையில் நபர் ஒருவர் வீல் வைத்த மேடை ஒன்றின் மீது ஏற்றிச் செல்கிறார்.

ஒரு ட்ரிப்புக்கு இருவர் என மீள்வினை போல மக்களுக்கு சாலையை கடக்கச் செய்கிறார். இந்த சேவையை செய்வதற்காக காசும் பெறுகிறார். இதனால் விருட்டென செல்லும் வாகனங்கள் பீய்ச்சி அடிக்கும் மழை நீரில் இருந்து அலேக்காக தப்பித்துக் கொள்கிறார்கள்.

இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பலரும், “தக்க சமயத்தில் யோசித்து இப்படியான ஒரு வேலையை செய்தவருக்கு எங்களுடைய பாராட்டுகள், இந்த வேலைக்கான காப்புரிமையை பெற்று பெரிய குழுவாக உருவாக்கி அவர் மேலும் வளரலாம், அவரது இந்த தொழில்முனைவோருக்கான மனப்பான்மை பாராட்டத்தக்கது” என்றெல்லாம் பதிவிட்டிருக்கிறார்கள்.