டிரெண்டிங்

அ.தி.மு.க கொறடாவை நீக்க வேண்டும்: சபாநாயகரிடம் வெற்றிவேல் மனு

அ.தி.மு.க கொறடாவை நீக்க வேண்டும்: சபாநாயகரிடம் வெற்றிவேல் மனு

webteam

அ.தி.மு.க கொறடா ராஜேந்திரனை நீக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் மனு அளித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் பழனிசாமியை நீக்க வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் கடந்த சில நாட்களுக்கு  ஆளுநரிடம் மனு அளித்தனர். இதையடுத்து அவர்கள் 19 பேரும் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கியிருந்தனர். இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேருக்கும் அணி மாறும் சட்டத்தின் கீழ் அ.தி.மு.க கொறடா ராஜேந்திரன் நோட்டீஸ் அனுப்பினார். பின்னர் மேலும் 3 எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்தித்து முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து கொறடாவின் நோட்டீஸிற்கு விளக்கமளிக்கும் வகையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கத் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் சபாநாயகர் தனபலை சந்தித்து விளக்கமளித்தனர். இந்நிலையில் அ.தி.மு.க கொறடாவை நீக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் மனு அளித்துள்ளார்.