டிரெண்டிங்

உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

webteam

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவிருந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளின் சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கக்கூடாது என மாற்றம் இந்தியா அமைப்பைச் சேர்ந்த நாராயணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து உள்ளாட்சித் தேர்தல் தேதியை நீதிமன்றமே அறிவிக்க வேண்டுமெனக் கோரிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். மேலும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையம் மேல்முறையீட்டு ஒரு வழக்கை தொடர்ந்தது. இவ்வழக்குகள் அனைத்தும் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்குகளுக்கான விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கவிருந்தது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளில் தீர்ப்பு வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.