டிரெண்டிங்

மாரடைப்பு நோயாளிகளை மருத்துவமனையில் சேர்க்க தாமதம் ஏன்?: வேணுகோபால் எம்.பி. கேள்வி

மாரடைப்பு நோயாளிகளை மருத்துவமனையில் சேர்க்க தாமதம் ஏன்?: வேணுகோபால் எம்.பி. கேள்வி

webteam

மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்காததற்கு போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாதது தான் காரணமா, இதனால் தான் உயிரிழப்பு உயர்கிறதா? என நாடாளுமன்ற மக்களவையில் அதிமுக எம்.பி. டாக்டர் வேணுகோபால் கேள்வி எழுப்பினார்.

மேலும் ‌உயிரிழப்புகளைத் தடுக்க மத்திய அரசு இதுவரை என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை விளக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ‌அதற்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் ஃபக்கன் சிங் குலஸ்தே, நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு தாமதமாக கொண்டு செல்வதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும், போதிய போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்கும் பொறுப்பு அந்தந்த மாநில அரசுகளிடம் தான் இருப்பதாகவும் தெரிவித்தார். அதேசமயம் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு தேவை‌யான உதவிகளை மத்திய அரசு வழங்கி வருவதாகவும் அமைச்சர் ஃபக்கன் சிங் குலஸ்தே தெரிவித்தார்.