டிரெண்டிங்

வேலூர்: நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள்- போட்டியின்றி தேர்வானவர்களுக்கு வெற்றி சான்றிதழ்

kaleelrahman

வேலூர் மாநகராட்சியில் 7 மற்றும் 8 ஆகிய வார்டுகளில் போட்டியின்றி தேர்வான திமுக வேட்பாளர்களுக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சான்றிதழை வழங்கினார்.

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட காட்பாடி ஒன்றாவது மண்டலம் 7 மற்றும் 8-வது வார்டில் திமுக, அதிமுக, பாமக, சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில், அதிமுக, பாமக, சுயேட்சை வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து திமுக சார்பில் போட்டியிட்ட 7-வது வார்டு வேட்பாளர் புஷ்பலதா வன்னிய ராஜா, 8-வது வார்டு திமுக வேட்பாளர் சுனில் குமார் ஆகியோர் ஒரு மனதாக போட்டியின்றி வெற்றி பெற்றார்.

இதனையடுத்து நேற்று (21.02.2022) வேலூர் மாநகராட்சி உதவி ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான செந்தில் குமரன் போட்டியின்றி தேர்வான திமுக வேட்பாளர் புஷ்பலதா வன்னிய ராஜா மற்றும் சுனில் குமார் ஆகிய இருவருக்கும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.