டிரெண்டிங்

குடுகுடுப்பைக்காரர் வேடமணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுகவினர்

குடுகுடுப்பைக்காரர் வேடமணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுகவினர்

kaleelrahman

வேலூரில் குடுகுடுப்பைக்காரர் வேடமணிந்து வாக்காளர்களிடம் திமுகவினர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

நுகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரத்தை அரசியல் கட்சியினர் தொடங்கியுள்ள நிலையில், மக்களிடம் வாக்குகளை பெற மக்களை கவரும் வகையில் வேட்பாளர்கள் பல்வேறு விதமான பிரச்சார யுக்திகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், வேலூர் மாநகராட்சி மற்றும் நகர, பேரூராட்சி பகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்தும், அவர்களுக்கு வாக்கு சேகரிக்கும் வகையிலும் சேலம் மகேஷ்வரன் என்பவர் குடுகுடுப்பைக்காரர் போல வேடமணிந்து உடுக்கை அடித்தவாரு வேட்பாளர்களுக்கு வாக்குகளை சேகரித்து வருகிறார்.