டிரெண்டிங்

வேலூர்: நண்பனுக்காக மணக்கோலத்தில் வாக்கு சேகரித்த புதுமண தம்பதி

வேலூர்: நண்பனுக்காக மணக்கோலத்தில் வாக்கு சேகரித்த புதுமண தம்பதி

kaleelrahman

மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக திருமணக் கோலத்தில் புதுமண தம்பதியினர் வாக்கு சேகரித்தனர்.

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 12வது வார்டில் திமுக சார்பில் வேட்பாளர் டிட்டா சரவணன் போட்டியிடுகிறார். இந்நிலையில், இதே வார்டை சேர்ந்த சத்யா நகரில் வசித்து வரும் ரவிச்சந்திரன் - ஸ்வேதா ஆகிய இருவருக்கும் நேற்று காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதையடுத்து திருமணம் முடித்த கையோடு மணமகனின் நண்பரான 12-வது வார்டு திமுக வேட்பாளர் டிட்டா சரவணனிற்கு ஆதரவாக திருமணமான கையோடு மதி நகர், அறுப்புமேடு, சத்யாநகர், கோபாலபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண கோலத்தில் வீடு வீடாகச் சென்று புதுமண தம்பதியினர் தீவிர வாக்கு சேகரிபில் ஈடுபட்டனர்.