எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடைபெற்று வருவதாக அமைச்சர் வெல்லம்மண்டி நடராஜன் கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்திட வேண்டும் என எங்களுக்கு ஆணை வழங்கி, அதை சட்டமன்றத்திலேயே கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் எழுச்சியான விழாவை நாங்கள் அரசின் சார்பாக நடத்திக் கொண்டிருக்கிறோம். விழாவுக்காக நடைபாதைகளில் விதிகள் மீறி பதாகைகள் வைக்கப்படவில்லை. அவ்வாறு வைத்திருந்தால் அதை உடனடியாக அகற்றிவிடுவோம். பொதுமக்களுக்கு இடையூறாக எந்தவித நிகழ்ச்சிகளும் நடைபெறாது” என்று கூறினார்.