திமுகவின் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வீரபாண்டி ஆறுமுகம் உயிரிழந்ததால், அவரது சொத்துக் குவிப்பு வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணையின் போது வீரபாண்டி ஆறுமுகம் தவிர அவரது குடும்பத்தினரின் தொடர்பு குறித்து விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.