டிரெண்டிங்

சேப்பாக்கம் மைதானத்தை நோக்கி விடுதலைச் சிறுத்தைகள் திடீர் பேரணி

சேப்பாக்கம் மைதானத்தை நோக்கி விடுதலைச் சிறுத்தைகள் திடீர் பேரணி

rajakannan

ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேப்பாக்கம் மைதானத்தை நோக்கி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பேரணியினர் ஈடுபட்டனர். 

சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைகளில் கொடிகளை ஏந்தியவாறு சேப்பாக்கத்திற்கு அருகில் உள்ள வாலஜா சாலையில் மைதானத்தை நோக்கி ஓடி வந்தனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதனால், சாலையில் அமர்ந்து அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். திடீர் சாலைமறியலால் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். 

அதேபோல், அண்ணா சாலைப் பகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, சேப்பாக்கம் மைதானத்தின் நுழைவாயிலுக்கு பூட்டு போட முயன்ற அக்கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, போட்டியை நடத்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும் என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில் போராட்டங்கள் வலுவடைந்து வருகிறது.