டிரெண்டிங்

ம.பி-யில் காங்கிரஸ் தோல்விக்கு வாஸ்து தான் காரணமாம்!

webteam

மத்தியபிரதேச மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி கடந்த 14 ஆண்டுகளாக தோல்வி அடைந்து வருவதற்கு மாநில கட்சி தலைமையகத்தில் உள்ள வாஸ்து குறைபாடே காரணம் என கட்சி தலைமை செய்தித்தொடர்பாளர் கே.கே மிஸ்ரா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், 

"காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள தொடர் தோல்விகள் குறித்து நான் ஆய்வு மேற்கொண்டேன். 2003ம் ஆண்டு முதல் கருத்தில்கொண்டு எனது ஆய்வை செய்தேன்.
அப்போது தான் மாநில கட்சி தலைமையகத்தில் வாஸ்து குறைபாடு இருப்பதை கண்டறி்ந்தேன். கட்சியின் மாநில தலைமையகத்தின் மூன்றாம் தளத்தில் உள்ள
கழிவறைகள் தவறான திசையை நோக்கி இருப்பதால் ஏற்பட்ட வாஸ்து குறைபாடே கட்சியின் தொடர் தோல்விக்கு காரணம் என கண்டறிந்துள்ளேன். வாஸ்து
குறைபாட்டை சரிசெய்யும் பொருட்டு, கழிவறைகள் மாற்றியமைக்கப்பட உள்ளன. மேலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. இந்த குறைகளை சரிசெய்து வரும் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடித்து ஆட்சிக்கட்டிலில் காங்கிரஸ் கட்சி அமரும்" என்று கூறியுள்ளார். 

வரும் 2018 ம் ஆண்டில், மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் வாஸ்து நம்பிக்கை கைகொடுக்குமா என்பது
தெரியவில்லை. இதனிடையே பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் மருத்துவமனையில் ஜோதிடர்களையும், குறி சொல்பவர்களும் பணியில் அமர்த்த முடிவு
செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.