திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அம்பேத்குமார் கோரைப்பாய் நெய்யும் மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாலையிட்டான் குப்பம் கிராமத்தில், திமுக வேட்பாளர் அம்பேத்குமார் கோரைப்பாய் நெய்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது திறந்த வாகனத்தில் சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபடுபட்ட அவருக்கு மாலையிட்டான் குப்பம் கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து கோரைப்பாய் நெய்யும் மண்டிக்கு சென்று கோரைப்பாய் தரத்தை பார்த்து அங்கிருந்த மக்களிடம் வாக்குகளை சேகரித்தார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோரைப்பாய் உற்பத்திக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும், கோரைப்பாய் உற்பத்திக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும், உள்ளிட்ட வாக்குறுதிகளை கூறி பரப்புரையில் ஈடுபட்டார்.