டிரெண்டிங்

அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அசந்து தூங்கிய எம்எல்ஏ!

அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அசந்து தூங்கிய எம்எல்ஏ!

webteam

கோவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்ற நிகழ்ச்சியில், வால்பறை எம்எல்ஏ தூங்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது. 

கோவையில் உள்ள கொடிசியா அரங்கில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநில மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சாதனை மலரை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டார். அப்போது ஊரக வளர்ச்சி துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜன், தனது கோரிக்கையை கூறியபடியே அமைச்சரின் காலில் விழுந்தார். இந்தச் சம்பவம் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே வால்பறை எம்எல்ஏ கஸ்தூரி கண் அசந்து உறங்கினார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, ஊதிய உயர்வு, கிரேடு உயர்வு உள்ளிட்ட ஊரக வளர்ச்சி துறை ஊழியர்களின் கோரிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உள்ளாட்சி ஊழியர்களுக்கு கண்டிப்பாக நல்லது நடக்கும். யார் கட்சி ஆரம்பித்தாலும் அதிமுக இயக்கத்தை ஒன்றும் செய்யமுடியாது. டிடிவி தினகரன் ஜெயலலிதா இருக்கும் போது கட்சியில் உறுப்பினராக இல்லை. 100 ஆண்டு காலத்திற்கு அதிமுக இயக்கம் இருக்கும். பல இயக்கங்கள் வரலாம். டிடிவி கட்சிக்கு போனவர்கள் அனைவரும் திரும்பி வந்து விடுவார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகின்றது என்றார்.