டிரெண்டிங்

ஜெக்கு புகழாரம்; திமுகவுக்கு கண்டனம், ரஜினியை சாடல்: வளர்மதி பேச்சு

webteam

காவிரி விவகாரத்தில் முதலில் திமுக எம்பிக்கள் ராஜினாமா செய்யவேண்டும் என முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். திருவாரூரில் நடைபெற்று வரும் அதிமுக உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி  “ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது காவிரி விவகாரத்தில் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு போதிய அழுத்தம் தரவில்லை என ஸ்டாலின் கூறி வருகிறார். முதலில் அவர் தங்கை கனிமொழி மற்றும் திமுக எம்.பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும்.மத்திய அரசை எதிர்த்து முதன்முதலாக அவமதிப்பு வழக்கு தொடர்ந்த ஒரே அரசு அதிமுக அரசுதான்.

ஆந்திர அரசு தங்களுக்கு தேவையானதை சாதித்து கொள்கிறது என ஸ்டாலின் கூறுகிறார். பாஜகவுடன் நாங்கள் கூட்டணியில் இல்லை. ஆனால் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பாஜகவோடு கூட்டணி வைத்து தேர்தலில் நின்றார்.சிஸ்டம் சரியில்லை என்றால் கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்யும் கடைக்குதான் போக வேண்டும்.ஜெயலலிதா தனது உயிரை கொடுத்து இந்த ஆட்சியையும் கட்சியையும் எங்களிடம் விட்டுச் சென்றுள்ளார் எனக் கூறினார்.