தமிழக மீனவர்களுக்கு எதிரான சட்டத்தை இலங்கை அரசு திரும்பப்பெற மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை காக்க உண்மையான அக்கறையுடன் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்காமல் வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது என வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.